Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 29, 2012

தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-14

அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-14

*மிகப்பெரிய யானைச் சந்தை பீகார் மாநிலம் சோனேப் பூரில் நடக்கிறது.

*யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்.

*யானை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி இவை மூன்றும் நின்று கொண்டே தூங்கக் கூடியவை.

*ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.

*பாம்புகள் கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும்.

*இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.

*பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக அருந்துகிறார்கள்.

*நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி ஆகும். இப்பறவையால் பறக்க முடியாது. ஆனால் தரையில் படு ஸ்பீடாக நடந்து செல்லும். பகலில் கூட்டில் தங்கும். இரவுதான் இரை தேடக் கிளம்பும். இது ஒரு தூங்கு மூஞ்சிப் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.

*நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின் மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம் முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.

இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல் போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16 கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.

*உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில் கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.

*தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan

No comments:

Post a Comment