Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 29, 2014

கொங்கு நாட்டு கோழி சாறு


நாட்டு கோழி - 1/2 கிலோ 
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ 
சீரகம் - 2 ஸ்பூன் 
மல்லி - 4 ஸ்பூன் 
சோம்பு - கால் ஸ்பூன் 
வர மிளகாய் - 4 
பூண்டு - 2 பல்லு 
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன் 
எண்ணெய் - 2 ஸ்பூன் 
கருவேப்பிலை - 2 இனுக்கு 
குருமிளகு - 4
மஞ்சள் - 1/4 ஸ்பூன் 
கடுகு - 1/4 ஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி 

Friday, November 28, 2014

மாற்றுத் திறனாளிக்கும் வசப்படுமா ஐ.ஏ.எஸ்?



  
மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவரிடம் உரையாடுகிறார் அந்த ஆட்சியர். “உங்களைப் போன்று கலெக்டராவதுதான் என் லட்சியம். ஆனால், அதற்கு வசதிதான் இல்லை” என்று வேதனையைச் சிரிப்பாக வெளிப்படுத்துகிறான் அந்த இளைஞன். அந்தச் சிரிப்பு ஏற்படுத்திய பாதிப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை மதுரையில் தொடங்கவைத்தது.

சிக்கன் கருவேப்பிலை ப்ரை


Ingredients

Wednesday, November 26, 2014

பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்….


111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. 
#A
Ambarella —— அம்பிரலங்காய்
Apple —— அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot —— சருக்கரை பாதாமி

Monday, November 24, 2014

சோப்பு யாரால் எப்போது உருவாக்கப்பட்டது

சோப்பு யாரால் எப்போது உருவாக்கப்பட்டது ஒரு சுவாரசிய வரலாறு

மெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்; Al Hillah & Babil Province) கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர்.

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம் பாகம் 4

ஜெயலலிதா சொன்ன அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் ஆதாரத்தோடு நீதிபதி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார்.
நீதிபதி குன்ஹா கடந்த 27ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் உள்ள முக்கியமான கருத்துகளைத் தொகுத்து கடந்த மூன்று தொடர் கடிதங்களில் நான் தெரிவித்திருப்பதை நீ படித்திருப்பாய். 
தொடர்ந்து நீதிபதி குன்ஹா அவர்கள் மேலும் தனது  தீர்ப்பில், 

25 சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள்: மத்திய அரசு திட்டம்

மத்திய மரபு சாரா புதுப்பிக்கத்தக்க அமைச்சகம் நாட்டில் 25 சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இதுவரை 12 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணைச் செயலர் தருண் கபூர் தெரிவித்தார்.

Sunday, November 23, 2014

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-பாகம்-3

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தனி நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டு வதாக நேற்றைய கடிதத்தின் இறுதியில் தெரிவித் திருந்தேன். நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில்,
"பொது ஊழியர் (அதாவது முதலமைச்சராக) ஆவதற்கு முன்பாக ஜெயலலிதா காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ. - சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் வருமானங் களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கி விடுகிறது.

களறி கறி


காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் (இதனை தாளம் என்று எங்க ஊரில் சொல்லுவோம்) வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு தாளத்தில் பெண்கள் என்றால் 3 பேரும், ஆண்கள் என்றால் 2 பேரும் வட்டமாக கீழே உட்காந்து சாப்பிடுவாங்க.அந்த தாளத்தில் இருக்கும் சாப்பாடை சமமாக பிரித்து சாப்பிடுவாங்க.

எலே! எங்க திருநெல்வேலி சீமைலே


திருநெல்வேலி.....

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி,தூத்துக்குடியை சேர்ந்தவர்களே. சென்னையின் பெருமைக்கு காரணம் நாங்களே,

தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும், கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும் நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமான தூத்துக்குடியை சார்ந்தவர்களே,

தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் நெல்லை தான்...எனவே எங்கள் தேவை எங்களாலே பூர்த்தி செய்ய படுகிறது,